“காற்றில் கடந்த காலத்தை, நிகழ வைக்கும் மாயமே, எழுத்து.”
“The magic that brings the past to life in the present is Writing.”
பசுமை முயற்சி – என் நூல்கள் இணையத்தில் இலவசமாகப் படிக்கலாம்
Green Initiative – My Books Are Free to Read Online
மின்நூல்கள் (E-Book) வாசித்து – காகிதம் சேமிப்போம்! இயற்கையை நேசிப்போம்!
Read on screen and save paper. Tap any book to start reading – no sign-up, no cost.
தமிழ் நூல்கள்
English Books
என்னைப் பற்றிAbout Me
பென்சில் எடுத்த சிறுவன்
என்றோ ஒரு நாள்
எழுத நினைத்து பென்சில் எடுத்த
சிறுவன் நான்!
நோட்டு புத்தகத்தில் எழுதிய கதை!
வறுமை காற்றில் கரைந்து
ஏமாற்றமாய் எங்கோ போனது!
பொறியாளன் ஆனேன்
வாழ்வாதாரம் கருதி
இனி நான் எழுதப் போவதில்லை என்று முடிவெடுத்து
பொறியாளன் ஆனேன்!
ஆனாலும் நான்
தமிழ்த் தாயின் பொறியில்தான்
இருக்கிறேன் என்று
அப்போது தெரியவில்லை!
மின்னூல் வார்க்கிறேன்
எண்ணும் எழுத்தும்
எலக்ட்ரானிக் வடிவம் பெறும்போதுதான்!
நான் கற்றதும் பெற்றதும்
எம் தமிழுக்காக என்பதை உணர்ந்தேன்.
புதிய பரிமாணத்தில்!
மின் நூலாய் என் நூல்களை
தமிழ்த் தாயின் சேலையாய் வார்க்கிறேன்....
The boy with a pencil
I was once a boy who picked up a pencil, filled with a deep longing to write. But the stories I penned in worn notebooks dissolved into the winds of hardship, drifting away as quiet disappointments.
Becoming an engineer
Believing I would never write again, I became an engineer. Yet, little did I know I was still moving within a greater, divine design.
Finding the purpose
It was only when numbers and letters took electronic form that I realized the truth: everything I had learned and gained was always meant to serve my Language. In this new dimension, I weave my books as digital threads—crafting a digital saree for my Mother, the sovereign spirit of Tamil.
அனைத்து நூல்கள்All Books
தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் அனைத்தும் இங்கே. இலவசமாகப் படிக்கலாம்.Every Tamil and English book in one place. All free to read online.
தமிழ் நூல்கள்
Avalavan Avanaval / அவளவன் அவனவள்
மனதைத் தொடும் ஓர் அமானுஷ்யக் காதல் கதை. ஒரு உண்மையான தம்பதியை உருவாக்குவது எது என்பதை உணர்த்துகிறது. காதலர்களும் தம்பதிகளும் குடும்பங்களும் அவசியம் படிக்க வேண்டிய நாவல். தம்பதிகள் பிரியாத ஓர் உலகை நோக்கிய முயற்சி.
Agrinai / அஃறிணை
உயிரற்ற பொருட்களுக்கு உயிரும் உணர்வுகளும் கிடைத்தால் என்ன நடக்கும்? உயிரற்றவற்றின் பார்வையிலிருந்து அன்பு, அக்கறை, பாசம், விசுவாசம் ஆகியவற்றை வெவ்வேறு கோணங்களில் சொல்ல முயன்றிருக்கிறேன்.
Iraivanakkaaval / இறைவனக்காவல்: பாகம் 1 - யுகம் கடந்த வனம்
காலப்பயணத்தின்போது ஏற்படும் காலமாற்றத்தில் இரண்டு விஞ்ஞானிகள் சிக்குகிறார்கள். புதிய உலகில் அவர்கள் எதைக் கண்டறிகிறார்கள்? புதிய சூழலியல் பூமி அமைப்புகளுடன் நான் எழுதிய அறிவியல் புனைவு நாவல். ஒரு தொடரின் தொடக்கம்.
Kathai Ezhuthum Kaakithangal / கதை எழுதும் காகிதங்கள்
நம் வாழ்வில் நாம் கடந்து செல்லும் எளிமையான, ஆனால் சிறப்பான மனிதர்களையும் தருணங்களையும் பற்றிய சிறுகதைகள். சிலவற்றை நாம் கவனிக்கிறோம், சிலவற்றைக் கவனிக்காமலே கடந்துவிடுகிறோம். உண்மையான அன்பு என்பது என்ன என்பதை இக்கதைகள் எடுத்துரைக்கின்றன.
Anaamikaa / அனாமிகா
பின்னோக்கிச் சொல்லப்படும் ஒரு சிறிய காதல் கதை. முடிவிலிருந்து தொடங்கி, தொடக்கத்தை நோக்கிப் பயணிக்கிறது.
English Books
Two Strings, One Melody: the English adaptation of Avalavan Avanaval
A beautiful supernatural love story that asks what truly makes a couple. A must-read for lovers, couples and families, written with the hope of a world without separation of couples.
Natural NtelligenZ: Welcome to the world of NI
Two scientists face a time shift during their time travel and explore a new world. A science fiction novel built around new eco Earth systems, and the start of a series.
ThingKings: Inanimates Emotion
What happens if inanimate objects get a soul and emotions? These short stories explore love, care, affection and loyalty from the point of view of the inanimate, with a message to pass on.
A Man Among Men PART 1: THE SALESMAN
The start of a novel series. Two travellers set out for Europe, face troubles on the way and overcome them, and the story ends on a cliffhanger.
தொடர்பு கொள்ளGet in Touch
புத்தகம் பற்றிய கேள்வியோ, கதை பற்றிய உங்கள் எண்ணமோ, ஒரு வணக்கமோ – உங்கள் செய்தியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.A question about a book, a thought on a story, or just a hello – I would love to hear from you.